Screen Reader Access     A-AA+
அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில், ஸ்ரீரங்கம், ஸ்ரீரங்கம் - 620006, திருச்சிராப்பள்ளி .
Arulmigu Aranganatha Swamy Temple, Srirangam, Srirangam - 620006, Thiruchirappalli District [TM025700]
×
Temple History

தல வரலாறு

கலியுகத்தில் காவிரியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பிரணவாகார விமானமும் மதிற்சுவர்களும் மண்ணில் புதையுண்டு பெரும் காடாக மாறியது. பல காலங்களுக்குப் பிறகு கிளி சோழன் என்று அழைக்கப்படும் சோழ நாட்டு அரசன் வேட்டையாடி விட்டு ஒரு மரத்தின் அடியில் இளைப்பாறுகையில் மரத்தின் மீது அமர்ந்திருந்த கிளியின் பாட்டைக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு பின்னர் அந்த இடத்தைத் தோண்டிப் பார்க்கையில் விமானத்தைக் கண்டுபிடித்தார். அதற்குத் திருவரங்கத் திருப்பதி எனப் பெயரிட்டுப் போற்றி வணங்கினார். பல்வேறு காலங்களில் பல்வேறு சேர, சோழ, பாண்டிய, பல்லவ, நாயக்கர் மன்னர்களால் பல திருப்பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இன்றும் பல்வேறு இடங்களிலிருந்தும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து பெருமாள் தரிசனம் செய்கின்றனர். தெற்கு இராசகோபுரம்: விஜய நகரப் பேரரசு ஆட்சியில்...

தல பெருமை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும் தானாகத் தோன்றிய திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனச் சிறப்பு பெற்றதும் ஆகும். ஆழ்வார்கள் பதின்மரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற இத்திருத்தலம் மற்ற வைணவத் திருத்தலங்களின் தலைமைபீடமாக விளங்கி வருகிறது. அகண்ட காவிரி ஆற்றின் நடுவில் ஒரு தீவு பகுதியில் ஏழு திருச்சுற்றுகளுடன், உயர்ந்த மதிற்சுவர்களுடன் 156 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தெற்கு ஆசியாவிலேயே மிக உயரமான 236 அடி உயரமுள்ள 13 நிலைகளை கொண்ட இராயகோபுரம் இங்கு அமைந்துள்ளது. திருக்கோயில் மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மீது ஸ்ரீரங்கநாதர் சயன திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். பல நதிகள் கடலில் சங்கமம் ஆவது போல் அனைத்துத் திவ்ய தேசங்களாகிய நதிகளும் திருவரங்கம் என்ற சமுத்திரத்தில் சேர்கின்றன. அரங்கனைச்...

புராண பின்புலம்

பிரம்மன் படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது தன்னுடைய படைப்புகள் யாவும் நிலையற்றதாகவும், விரைவில் அழியக் கூடியதாகவும் இருப்பதைக் கண்டு செய்வதறியாது பரமாத்மாவான ஸ்ரீமன் நாராயணனிடம் வேண்டினார். எம்பெருமான் மிகவும் உகந்து ஓம் நமோ நாராயணாய என்ற எட்டெழுத்து மந்திரத்தை உள்ளத்தில் நிறுத்தி தன்னை வழிபடுமாறு சொல்ல, அவ்வாறே பிரம்மன் எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே தவம் செய்து கொண்டிருந்தார். திருக்கோயிலின் பிரணவாகார விமானம் சத்ய லோகத்தில் பிரம்மனின் அருந்தவப்பயனால் திருப்பாற்கடலிலிருந்து தானாகத் தோன்றியதாகும். பிரணவாகார விமானத்திற்கு நித்யபடி பூஜைகள் செய்ய பிரம்மன் சூரியனை நியமித்தார். பின்னர் திரேதா யுகத்தில் வைவஸ்வத மனு அவரது மகன் இஷ்வாகு ஆகியோர் பூஜித்து வந்தனர். இஷ்வாகு அந்த விமானத்தை அயோத்தியில் எழுந்தருளச் செய்தார். சூரிய குல மன்னனான தசரதன்...