திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலானது பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், பூலோக வைகுந்தம் எனவும், போக மண்டபம் எனவும் 108 வைணவ திருக்கோயில்களில் முதன்மையானதுமாகத் திகழ்கிறது. இத்திருக்கோயில் ஏழு திருச்சுற்றுகளையும், 52 உப சன்னதிகளும், ஓம் என்னும் பிரணவ வடிவிலான தங்க விமானம், தெற்கு ஆசியாவிலேயே 236 அடி உயரமான இராயகோபுரம் உள்பட 21 கோபுரங்களுடனும் உள்ள 156 ஏக்கர் பரப்பளவுள்ள திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலின் இருபுறமும் கங்கையை விட புனித ஆறான காவேரி ஆற்றினால் சூழப்பட்ட திருநாவலந்தீவு என்ற தீவு பகுதியில் அமைந்துள்ளது. வருடத்தின் அநேக நாட்களைத் திருவிழாக்களைக் கொண்ட மிகச் சிறப்புமிக்க திருக்கோயிலாகும். இத்திருக்கோயிலில் பாஞ்சராத்திர ஆகமம் பாரமேஸ்வர சம்ஹிதைபடி பூசை முறைகள் நடைபெற்று வருகிறது. இத்திருக்கோயிலில்...
06:00 AM IST - 12:00 PM IST | |
12:00 PM IST - 09:00 PM IST | |
07:15 AM IST - 09:00 AM IST | |
12:30 PM IST - 02:15 PM IST | |
05:30 PM IST - 07:00 PM IST | |
சாதாரண நாட்களில் மேற்கூறிய நேரங்களில் தரிசனம் மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. திருவிழாக் காலங்களில் மேற்படி பூஜா காலம் மாறுதலுக்கு உட்பட்டது. |